புதுடில்லி:”ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன், அது தொடர்பாக மாநில அரசை இரு முறை எச்சரித்திருந்தோம். இதையும் மீறி, அங்கு குண்டு வெடிப்பு நடந் தது, பாதுகாப்பு விஷயத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டது’ என, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:புனேயில், ஜெர்மன் பேக்கரியில் கடந்த மாதம் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் இறந்தனர். உளவுத் துறையின் தோல்வியால் தான், இதுபோன்ற அசம்பாவிதம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த குண்டு வெடிப்புக்கு முன்னதாக, மகாராஷ்டிரா போலீசாரை இரண்டு முறை எச்சரித்து இருந்தோம்.இது தொடர்பாக உளவுத் தகவல்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டன. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதையும் மீறி, குண்டு வெடிப்பு நிகழ்ந்து விட்டது.
இச்சம்பவம், பாதுகாப்பு விஷயத்தில் ஒரு கரும்புள் ளியை ஏற்படுத்தி விட்டது.தேவைப்படும் போதெல் லாம், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உளவுத் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை நவீனப்படுத்த விரும்பும் மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு, மத்திய அரசு போதிய உதவிகளை செய்ய தயாராக உள்ளது.ஆறு மாநிலங்களில் பயங் கரவாத எதிர்ப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.போலீசாருக்கு அதி நவீன ஆயுதங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கும் உதவ, மத்திய அரசு தயார். மத்திய படையினருக்கு மட்டுமல்லாது, மாநில போலீசாருக்கும் குண்டு துளைக்காத உடைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்
Leave a Reply