மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் கட்டுமான நிறுவனமான எல் அன்ட் டி(லார்சன் அன்ட் டூயூப்ரோ), இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனிடம்(ஐ.ஓ.சி.,) இருந்து ரூ. 1,400 கோடிக்கு புதிய ஆடர் பெற்றுள்ளது.
இதுகுறித்து மும்பை பங்குச்சந்தையிடம் எல் அன்ட் டி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.ஓ.சி., நிறுவனத்திடம் இருந்து 1,400 கோடி ரூபாய்க்கு புதிய ஆடர் பெற்று இருப்பதாகவும், ஒரிசாவில் எரிபொருள் சுத்திகரிப்பு தொடர்பாக இந்த ஆடர் பெறப் பட்டதாக எல் அன்ட் டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆடர் ஜூலை 2012 ஆரம்பிக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த அறிவிப்பு காரணமாக எல் அன்ட் டி நிறுவன பங்குகள் 0.63 சதவீதம் உயர்ந்து ரூ. 1,645.90க்கு வர்த்தகமாயின.
Leave a Reply