ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அரசு வேலை வாய்ப்புகளில் இனி ஐதராபாத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பளிக்கும் வகையில், ஐதராபாத்தை மற்ற மண்டலங்களில் இருந்து விடுவிக்கும் வகையிலான சட்டத் திருத்தம், ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள் ளது.
இது தெலுங்கானா தனிமாநிலப் பிரிவினையாளர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் மேற்கொண் டுள்ள முயற்சி என்று கருதப்படுகிறது.ஆந்திராவைப் பொறுத்தவரை, அரசு வேலை வாய்ப்பில், அந் தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில், ஆந்திரா ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஐதராபாத், ஆறாவது மண்டலத்தில் சேரும்.ஆறாவது மண்டலத்தில் ஐதராபாத்தோடு, தெலுங்கானாவில் உள்ள சில மாவட்டங்களும் அடங் கும். அதன்படி, ஐதராபாத் தவிர பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அங்குள்ள அரசு வேலை வாய்ப்புகளில் பங்கு பெறமுடியும்.கடந்த 1975ல் ஜனாதிபதி பிறப் பித்த உத்தரவுச் சட்டம் மூலம் இத் திட்டம் இதுவரை நடைமுறையில் இருக்கிறது. தெலுங்கானா பிரச்னையில் ஐதராபாத் மையமாக இருப்பதால், பிரிவினையாளர்களைத் திருப்திபடுத்தும் வகையில், ஐதராபாத்தை இந்த மண்டலங்களில் சேர்க்காமல் விடுவிப்பதற்கு வழிசெய்யும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றுவதற்காக, ஆளும் காங்கிரஸ் அனைத்துக் கட் சிக் கூட் டத்தில் சம்மதத்தைப் பெற்றது.அதன்படி, நேற்று முன்தினம் கூடிய ஆந்திர சட்டசபையில், ஐதராபாத்தை எந்த மண்டலத்திலும் சேர்க்காமல் விடுவிக்கும் தீர்மானம் (ப்ரீ ஜோன்) நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம், 1975ல் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் ஐதராபாத் பற்றிய பிரிவில் திருத்தம் செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொள்கிறது.
இந்தத் தீர்மானத்தின்படி திருத்தம் நிறைவேற்றப்பட்டால், இனி ஐதராபாத் நகரைச் சேர்ந்தவர்கள் மட்டும் அங்குள்ள அரசு வேலைகளில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஏற்கனவே ஐதராபாத் நகர அரசு வேலைகளில் வேலைபார்த்து வரும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர்.இருப்பினும் இந்த முடிவுக்கு ராயலசீமா மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த எம்.எல். ஏ.,க்களிடமிருந்து எதிர்ப்பு வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட் டது. முதல்வர் ரோசய்யா, அப்பகுதிகளைச் சேர்ந்த தனது கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் பேசி இத்தீர்மானத்துக்குச் சம்மதிக்க வைத்தார்.தீர்மானத்தை எதிர்த்த சிரஞ்சீவி தலைமையிலான பிரஜா ராஜ்யம் கட்சி உறுப்பினர்கள், சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு, எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். ‘1975ன் ஜனாதிபதி உத்தரவு’ முறையாகக் கடைபிடிக் கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். -நமது சிறப்பு நிருபர்-
Leave a Reply