மாநிலம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள் லைட், மீடியம், ஹெவி என மூன்று வகையாக பிரிக்கப்படும் என்று டி.ஜி.பி லத்திகா சரண் கூறினார்.
ஊட்டியில் டி.ஜி.பி லத்திகா சரண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
போலீஸ் ஸ்டேஷன்களில் தேவையான அளவு போலீசார் விரைவில் நியமிக்கப்படுவர். மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் லைட், மீடியம், ஹெவி என 3 பிரிவாக பிரிக்கப்படும்.
லைட் வகையில் 30, மீடியம் வகையில் 50, ஹெவி வகையில் போலீசார் நியமிக்கப்படுவர். 14 மாவட்டங்களில் இதுபோன்று 3 வகை காவல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மாநாட்டுக்கு வருபவர்கள் அருகிலுள்ள சுற்றுலா தலமான ஊட்டிக்கு வருவார்கள் என்பதால், ஊட்டியிலும் அதிகளவில் போலீசார் நியமிக்கப்படுவர்.
இடைத்தேர்தல் நடைபெறும் பென்னாகரம் தொகுதியில் 64 இடங்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டுபிடிக்கப்பட்டு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 இடங்களில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் கமாண்டோ படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply