சச்சின் அணி அசத்தல் வெற்றி *ஹர்பஜன் அதிரடி

harbhajan-singh_7மும்பை: டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.

பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஹர்பஜன், பவுலிங்கிலும் ஜொலிக்க, டெக்கான் அணி பரிதாபமாக வீழ்ந்தது.
மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் தற்போது இந்தியாவில் நடக்கிறது. இதன் 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற டெக்கான் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., ஏலத்தில் இரண்டாவது அதிகபட்ச தொகைக்கு (ரூ. 3.30 கோடி), டெக்கான் அணியால் வாங்கப்பட்ட வெஸ்ட் இண்டீசின் கீமர் ரோச், களமிறங்கினார்.
சரிந்த துவக்கம்:
மும்பை அணிக்கு வழக்கம் போல் சச்சின், சிகர் தவான் துவக்கம் தந்தனர். சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் மிரட்டிய சிகர் தவான், இம்முறை 8 ரன்னுடன் நடையை கட்டினார். சற்று அதிரடி காட்டிய பிராவோ (23), திவாரி (4) ஆகியோர், ஆர்.பி.சிங்கின் ஒரே ஓவரில் வீழ்ந்தனர்.
சச்சின் அரைசதம்:
அடுத்து வந்த ராயுடு (6), தமிழக வீரர் சதீஷ் (3), பிரக்யான் ஓஜாவின் சுழலில் சிக்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போலார்டு (1) ஏமாற்றினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் கேப்டன் சச்சின், தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐ.பி.எல்., அரங்கில் ஏழாவது அரைசதம் அடித்த இவர், 55 ரன்களில் வெளியேறினார்.
ஹர்பஜன் மிரட்டல்:
பின் களமிறங்கிய ஹர்பஜன், அதிரடியில் மிரட்டினார். கீமர் ரோச் ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி அடித்து மிரட்டிய இவர், ரோகித் சர்மாவின் கடைசி ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்து அசத்தினார் ஹர்பஜன். கடைசி 3 ஓவரில் மட்டும், 52 ரன்கள் எடுக்கப்பட, மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் (49), மெக்லாரன் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.
கில்லி “டக்’:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு, ஹர்பஜனின் முதல் ஓவரிலேயே கில்கிறிஸ்ட், “டக்’ அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஜாகிர் கான் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்த கிப்ஸ் (27), இதே ஓவரில் அவுட்டானார்.
மலிங்கா அபாரம்:
அடுத்து மிஸ்ரா (13), சைமண்ட்ஸ் (1) ஆகிய இருவரையும், மலிங்கா ஒரே ஓவரில் வெளியேற்றினார். சுமன் (15), ஹர்பஜன் சுழலில் வீழ்ந்தார். சற்று நம்பிக்கை தந்த ரோகித் சர்மாவை (45), ஜாகிர் கான் போல்டாக்கினார். பின் கீமர் ரோச் (10), ஆர்.பி.சிங் (1) ஏமாற்ற, டெக்கான் அணி, 17.4 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் விருதை ஹர்பஜன் வென்றார்.

“அசத்தல்’ சச்சின்
மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சச்சின், இதுவரை 6 போட்டிகளில் (17, 63, 25, 71, 72 மற்றும் 55) நான்கு அரைசதம் உட்பட 303 ரன்கள் குவித்துள்ளார். இத்தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில், சச்சின் இரண்டாவது இடத்தில் <(முதலிடம் காலிஸ், 310) உள்ளார். ஸ்கோர் போர்டு மும்பை இந்தியன்ஸ் தவான் -எல்.பி.டபிள்யு.,(ப)ஜஸ்கரன் சிங் 8(12) சச்சின்(கே)கில்கிறிஸ்ட்(ப)ஆர்.பி.சிங் 55(43) பிராவோ(கே)சைமண்ட்ஸ்(ப)ஆர்.பி.சிங் 23(16) திவாரி(கே)கில்கிறிஸ்ட்(ப)ஆர்.பி.சிங் 4(3) ராயுடு(ஸ்டம்டு)கில்கிறிஸ்ட்(ப)பிரக்யான் 6(7) சதீஷ்(கே)சுமன்(ப)பிரக்யான் 3(5) போலார்டு(கே)சுமன்(ப)ஜஸ்கரன் சிங் 1(5) மெக்லாரென்-அவுட் இல்லை- 13(15) ஹர்பஜன்-அவுட் இல்லை- 49(18) உதிரிகள் 10 மொத்தம் (20 ஓவரில் 7 விக்.,) 172 விக்கெட் வீழ்ச்சி: 1-24(தவான்), 2-64(பிராவோ), 3-68(திவாரி), 4-84(ராயுடு), 5-92(சதீஷ்), 6-93(போலார்டு), 7-119(சச்சின்). பந்து வீச்சு: கீமர் ரோச் 4-0-32-0, ஜஸ்கரன் சிங் 3-0-30-2, பிரக்யான் ஓஜா 4-0-24-2, ஆர்.பி.சிங் 4-0-31-3, சைமண்ட்ஸ் 4-0-40-0, ரோகித் சர்மா 1-0-14-0. டெக்கான் சார்ஜர்ஸ் கில்கிறிஸ்ட்(கே)சச்சின்(ப)ஹர்பஜன் 0(2) மிஸ்ரா(கே)மெக்லாரென்(ப)மலிங்கா 13(12) கிப்ஸ்(கே)போலார்டு(ப)ஜாகிர் 27(16) சைமண்ட்ஸ்(கே)பிராவோ(ப)மலிங்கா 1(6) ரோகித்(ப)ஜாகிர் 45(28) சுமன்(கே)+(ப)ஹர்பஜன் 15(17) வேணுகோபால்(கே)மெக்லாரென்(ப)போலார்டு 7(9) ஜஸ்கரன் சிங்(கே)சப்ஸ்-டுமினி(ப)ஹர்பஜன் 1(2) ரோச்(ப)ஜாகிர் 10(9) ஆர்.பி.சிங்(ப)மலிங்கா 1(5) பிரக்யான்-அவுட் இல்லை- 0(0) உதிரிகள் 11 மொத்தம் (17.4 ஓவரில் ஆல் அவுட்) 131 விக்கெட் வீழ்ச்சி: 1-0(கில்கிறிஸ்ட்), 2-47(கிப்ஸ்), 3-49(மிஸ்ரா), 4-50(சைமண்ட்ஸ்), 5-81(சுமன்), 6-100(வேணுகோபால்), 7-116(ஜஸ்கரன் சிங்), 8-130(ரோகித்), 9-131(ரோச்), 10-131(ஆர்.பி.சிங்) பந்து வீச்சு: ஹர்பஜன் 4-0-31-3, மெக்லாரென் 3-0-24-0, ஜாகிர் கான் 3-0-21-3, மலிங்கா 3.4-0-12-3, பிராவோ 2-0-16-0, போலார்டு 2-0-20-1. ராஜஸ்தான் அபாரம் தொடர்ந்து நான்கு வெற்றிகள் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட் மும்பை 6 5 1 10 +1.313 பெங்களூரு 6 4 2 8 +0.961 ராஜஸ்தான் 7 4 3 8 +0.112 டெக்கான் 5 3 2 6 -0.369 கோல்கட்டா 6 3 3 6 --0.381 டில்லி 6 3 3 6 -0.618 சென்னை 7 2 5 4 -0.190 பஞ்சாப் 6 1 5 2 -0.771 * மும்பை-டெக்கான் அணிகள் இடையிலான போட்டி வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *