கோபன்ஹேகன்: டென்மார்க்கில் நடந்த தமிழீழ தனியரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 98.2% தமிழர்கள் ஆதரவு [^] தெரிவித்துள்ளனர்.
தமிழீழ தனியரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான டென்மார்க் தழுவிய வாக்கெடுப்பில் 4147 தமிழர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
இவர்களில், 98.2 சதவீதமானவர்கள் தனி ஈழ தனியரசை ஆதரித்து வாக்களித்தனர். டென்மார்க்கில் தமிழ் பேசும் மக்கள் என ஒரு ஆவண பதிவு இல்லாததால் இலங்கைத் தீவை சேர்ந்தவர்கள் என்ற பதிவையே வாக்கெடுப்பின் மூலமாக வாக்கெடுப்பை நடத்திய நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இருப்பினும் சிங்களத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் இதில் வாக்குரிமை பெறவில்லை.
டென்மார்க்கில் வாழும் இலங்கை தீவை சேர்ந்தவர்களான 7147 மக்களில் 4147 மக்கள் இந்த வாக்கெடுப்பில் பங்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply