சென்னை : 2010-11ம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட சில முக்கிய அம்சங்கள் : இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ. 2,500 கோடி பயி்ர் கடன் வழங்கப்படும்; விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 891 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது; சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் 77,000 ஏக்கர் நிலத்தில் விரிவுபடுத்தப்படும்; சன்னரக நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ. 1,100 வழங்கப்படும்; செம்மை நெல் சாகுபடித் திட்டம் 6.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படும்; கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டு, ரூ. 1650 மற்றும் அரவைக் கூலி மற்றும் போக்குவரத்து செலவு உள்பட ரூ. 2000 ஆக வழங்கப்படும்; 2010-11ல் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ.140 கோடி ஒதுக்கீடு; விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு ரூ. 295 கோடி மானியம்; 2010-11ல் கூடுதலாக 10 ஆயிரம் விவசாய சுய உதவிக் குழுக்கள்; விவசாய சுய உதவிக் குழுக்களுக்கு உதவ ரூ. 10 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு; மாற்றுத்திறன் படைத்தோருக்காக முதல்வர் கருணாநிதி மேற்பார்வையில் தனித் துறை; கோவை ஆவின் பால் பண்ணை நவீனமயமாக்கப்படும் ; ரூ. 609 கோடியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்; ரூ. 439 கோடியில் ஏரிகள், குளங்கள் புனரமைப்புத் திட்டம்; பரம்பிக்குளம், ஆழியாறு கால்வாயை சீராக்க ரூ. 127 கோடி; தாமிரபரணி, நம்பியாறு ஆறுகள் இணைப்புக்கு ரூ. 126 கோடி; நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 200 கோடி; காவிரியில் கதவணை அமைக்க ரூ. 193 கோடி ஒதுக்கீடு ;நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு;உணவு மானியத்திற்கு ரூ. 3750 கோடி ஒதுக்கீடு; கூடுதலாக 4.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யும் வகையில் ஏரிகள் புனரமைப்பு; மிளகு, சீரகம், சோம்பு, பொடி வகைகளுக்கு வரி விலக்கு. பொடி வகைகளுக்கான மூலப் பொருட்களுக்கும், சோற்றுக் கற்றாழை மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் வரி விலக்கு; காவல்துறைக்கு ரூ. 2962 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ. 120 கோடியில் 2000 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்; நகர்ப்புறங்களில் குடிசைகளை அகற்றி அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்ட ரூ. 300 கோடி; 5000 பள்ளிகளில் ரூ. 85 கோடியில் சீரமைப்புப் பணிகள்; 2000 நடுநிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் வழங்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு; ரூ. 68 கோடியில், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், ஈரோடு மாவட்டங்களில் படிக்கும் பாரதம் திட்டம்; மதுரையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்; மாணவர்களுக்கு ரூ. 10 கோடியில் ஆங்கில அகராதி; விழுப்புரத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம்;மேலூரில் பாலிடெக்னிக் கல்லூரி;புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 4 அரசு கலை, 7 தொழில்நுட்பக் கல்லூரிகள்; அரசு கல்லூரிகளில் எம்.ஏ, எம்.எஸ்.சி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து;பாக்குமர இலை தட்டு, தொன்னை மீதான வரி ரத்து;இறக்குமதி சர்க்கரைக்கு ஓராண்டுக்கு வரி விலக்கு;கடல் அரிப்பு தடுப்புத் திட்டப் பணிகளுக்கு ரூ. 200 கோடி;மீனவர்கள் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளுக்கு வரி விலக்கு;108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு ரூ. 79 கோடி ஒதுக்கீடு;கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு;இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Leave a Reply