குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கம்ப்யூட்டர், மொபைல் போன்கள், பிளே ஸ்டேஷன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
காலப்போக்கில் 2-டி, 3-டி என விளையாட்டுகளின் தரம் உயர்ந்து கொண்டே போகிறது. அத்தகைய விளையாட்டுகளை விளையாடுவதோடு மட்டுமல்லாமல் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கான படிப்பு தான் ‘கேம்ஸ் டிசைனிங்’. ‘கேம்ஸ் டிசைனிங்’ என்பது ஒரு விளையாட்டை உருவாக்க தேவையான உள்ளடக்கத்தையும், விதிமுறைகளையும் திட்டமிட்டு செயல்படுத்துவதாகும். வீடியோ கேம்ஸ்களை தவிர, இணையதளத்தில் விளையாடப்படும் ‘ஆன்லைன்’ விளையாட்டுகள், செஸ், புதிர்கள், கெர்ஸ், வார்த்தை விளையாட்டு போன்ற மொபைல் போன் விளையாட்டுகள் போன்றவை ‘கேம்ஸ் டிசைனிங்’ மூலம் வடிவமைக்கப்படுகின்றன.
விளையாட்டுகள் உருவாகும் விதம் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் உருவாக பல பிரிவுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ‘கேம்’ மெக்கானிக்ஸ் சில தேற்றங்களை பயன்படுத்தி விளையாட்டின் விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
குறியீடுகள் (கோடிங்)எழுதுதல்:
கம்ப்யூட்டர் மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விளையாட்டுகளுக்கான குறியீடுகள் (கோடிங்) எழுதப்படுகின்றன.
விசுவல் ஆர்ட்ஸ்
விளையாட்டுக்கு தேவைப்படும் உருவங்கள் இதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. விளையாட்டுக்கு உயிர் கொடுக்கும் துறை இதுவாகும். உண்மையான மனிதர்கள் போன்று தோற்றம் அளிக்கும் வகையில் இன்றைய விளையாட்டுகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.
ஒலி அமைப்பு
நாம் கண் முன் பல்வேறு ஒளி அமைப்புடன் தோன்றும் விளையாட்டை மேம்படுத்த ஒலியை சேர்க்கும் பணிகள் இப்பிரிவில் மேற்கொள்ளப்
படுகின்றன.
கதை அமைப்பு
மற்ற பிரிவுகளை விட முக்கியமான பிரிவு இதுவாகும். திரைப்படங்களை போன்று விளையாட்டை உருவாக்கவும் கதை அமைப்பு தேவைப்படுகிறது. கதை இல்லாமல் மேற்கூறிய எந்த பிரிவும் வேலை செய்ய இயலாது.
உற்பத்தி
இங்கு உற்பத்தி என்பது பல நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் விளையாட்டுகளை மக்களிடம் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதாகும். மேற்கூறிய அனைத்து பிரிவுகளும் ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டு உருவாக தேவைப்படும் காரணிகளாக உள்ளன. பெரும்பாலும் போர்டு கேம்ஸ், வீடியோ கேம்ஸ், கார்டு கேம்ஸ் உள்ளிட்ட சில வகைகளில் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் உருவாக்கப்படுகின்றன. சில விளையாட்டுகள் வேறு வகையை பயன்படுத்தியும் தயாராகின்றன.
பயன்பாடுகள்
கம்ப்யூட்டர் விளையாட்டுகள் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், கல்வியை கற்பிப்பதற்கும், சில பயிற்சி முறைகளை வழங்குவதற்கும் வடிவமைக்கப்படுகின்றன. உதாரணமாக, ரேசிங், சூட்டிங், பில்டிங், கலெக்டிங், டிரேடிங், எஸ்கேப்பிங், ஆக்ஷன், லேர்னிங், ஸ்டன்ட்ஸ், உள்ளிட்டவை அடங்கும்.
வாய்ப்புகள்
நம்நாட்டில் ‘கேம் டிசைனிங்’ துறைக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளன. இஷிர் இன்போடெக், ஷார்க்ஸ், ஸ்மக்கால் போன்ற இந்திய நிறுவனங்கள் ‘கேம் டிசைனிங்’கில் ஈடுபட்டுள்ளன. வடிவமைப்பாளர், இளைய வடிவமைப்பாளர், எழுத்தாளர், ஆய்வாளர் போன்ற பணிகளில் அமரலாம். பயிற்சி காலத்தில் ரூ.7, 000 முதல் ரூ.10,000 வரை பெறலாம். திறமை மற்றும் அனுபவத்தை பொறுத்து ரூ.30,000 முதல் ரூ.70,000 வரை ஊதியம் பெறலாம்.
பயிலும் நிறுவனங்கள்
* இமேஜ் காலேஜ் ஆப் ஆர்ட், அனிமேஷன் மற்றும் டெக்னாலஜி (ஐ.சி.ஏ.டி.,), சென்னை ( http://www.icat.ac.in/index.asp )
* இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கேமிங் மற்றும் அனிமேஷன் (ஐ.ஐ.ஜி.ஏ.,), மும்பை ( http://www.iiga.in/index.html )
* ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் கேமிங் மற்றும் அனிமேஷன் (ஏ.ஐ.ஜி.ஏ.,), பெங்களூரு ( http://www.aiga.in/index2.html )
* அகாடமி ஆப் அனிமேஷன் மற்றும் கேமிங்(ஏ.ஏ.ஜி.,), நொய்டா, போபால், லக்னோ ( http://www.aag.edu.in/index.html )
* நாடு முழுவதும் உள்ள அரீனா அனிமேஷன் சென்டர்கள் ( http://www.arenamultimedia.com/home.aspx )
* டி.எஸ்.கே.,இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், புனே ( http://www.dsksic.com/index.asp )
* சிரிஷ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட், அனிமேஷன் மற்றும் டெக்னாலஜி, பெங்களூரு ( http://srishti.ac.in/ )
Leave a Reply