சென்னை : “”மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக அரியலூரில் நாளை (மார்ச் 7) தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித் துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய கூடுதல் இழப்பீடுத் தொகை வழங்கக்கோரியும், அவர்களுக்கு வீட்டுக்கொருவருக்கு வேலை வழங்கக்கோரியும், அரியலூர் பகுதியில் உள்ள சிமென்ட் ஆலைகளில் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரியும், மின்தடையால் மாவட்டம் முழுவதும் உள்ளதொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் பாதிக்கப்படுதை கண்டித்தும், கட்சித் தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடப்
படுவதை கண்டித்தும் நாளை காலை 10.00 மணிக்கு அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஜெகன் வீரபாண்டியன் தலைமை வகிக்கிறார்.மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் முன்னிலை வகிக்கிறார். கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் பங்கேற்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Leave a Reply