ஜெனீவா: டாடா மோட்டார் நிறுவனம் தயாரிக்கும் நானோ காரின் விலை அதிகரிக்கக் கூடும் என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிட் டுள்ளது. இந்தியாவின் பிரபலமான டாடா மோட்டார் நிறுவனம், ஒரு லட்ச ரூபாயில் நானோ கார் தயாரித்து வெளியிடுவதாகத் தெரிவித்தது. அதன் பின் அந்தக் காருக்கான முன்பதிவு துவங்கியது.
2009 ஏப்ரலில் நிறுத்தப்பட்ட முன்பதிவின் படி இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேர் பதிவு செய் துள்ளனர். இந்நிலையில், மூலப் பொருட்களின் விலையேற்றத்தாலும், சரக்குப் போக்குவரத்து தொடர் பான செலவுகள் அதிகரித்தமையாலும் நானோ காரின் விலை அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக, டாடா மோட்டாரின் துணை சேர்மன் ரவிகாந்த் கூறுகையில், ‘மூலப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து விட்டதால், நானோ காரின் விலையில் மாற்றம் செய்ய வேண்டி வரலாம்’ என்று தெரிவித் துள்ளார். டாடா மோட்டாரின் (இந்தியச் செயல்பாடுகள்) நிர்வாக இயக்குனர் பிரகாஷ் தெலங்கும், ‘விலை உயர்வு என்பது அவசியம் தான். ஆனால் இன்னும் இறுதி முடிவுக்கு நாங்கள் வரவில்லை’ என்றார். இருப்பினும், இதுவரை பதிவு செய்தவர்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட தொகையான ஒரு லட்ச ரூபாய்க்கே வழங் கப்படும் என்று ரவிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். சனந்த் மற்றும் பன்ட்நாகர் தொழிற்சாலைகளில் இப்போது நானோ கார் தயாராகிறது. சனந்த் தொழிற்சாலை ஒரு மாதத் துக்கு நாலாயிரம் கார்களைத் தயாரிக்கும்.
அதன் ஆண்டு தயாரிப் பான இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கார்கள் என்பதை, ஐந்து லட்சமாக அதிகப் படுத்தும் விதத்தில் தொழிற்சாலை விரைவில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. கடந்த மாதம் வரை 25 ஆயிரத்து 640 நானோ கார்கள் வெளிவந்திருக் கின்றன என்பது குறிப் பிடத்தக்கது.
Leave a Reply