டோக்கியோ:”ஜப்பானில் முதியவர்கள் மற்றும் குறைந்து வரும் மக்கள் தொகையை கவனிக்க உதவும் வகையில் வெளிநாட்டு நர்சுகள் மற்றும் பல் மருத்துவர்களுக்கான விசா விதிமுறைகளை தளர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது’ என, அந்நாட்டு அரசு தெரிவித்தது.
ஜப்பான் குடியேற்றத்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:பிற நாடுகளில் இருந்து நர்சுகள் மற்றும் பல் மருத்துவர்கள், ஜப்பானில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்படுகிறது. புதிய ஐந்தாண்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், இதற்கான அறிவிப்பு இம்மாதமே வெளியாகலாம்.
இதற்காக, விசா தொடர்பான கட்டுப்பாடுகளை அகற்றுவது குறித்து ஆலோசனை நடக்கிறது. ஜப்பான் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. எனவே, பிற ஆசிய நாடுகளில், அதிகரித்து வரும் மக்கள் தொகையில் இருந்து புதிய ரத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம்.மேலும், பல் மருத்துவர் பற்றாக்குறையை போக்க, வெளிநாட்டில் இருந்து வரும் பல் மருத்துவர்களுக்கான ஆறு ஆண்டுகால பணிக் கட்டுப்பாடும் நீக்கப்படலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜப்பானின் மக்கள் தொகை கடந்தாண்டு அதிகளவு குறைந்தது. ஆனால், அந் நாட்டில், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கை கடந்தாண்டு 2.89 கோடியாக உள்ளதாக அரசின் சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.
Leave a Reply