சென்னை: துணை முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தொழிற்சாலைகள் ஆய்வாளர் துறை ஆகியவற்றில் 324 பேருக்கு, பணி நியமன உத்தரவுகளை நேற்று வழங்கினார்.
டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு 174 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் தேர்வானவர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் நேற்று காலை நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின், பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.
மேலும், அரக்கோணம் தொழிற்சாலையில் பணியிழந்த 52 பேருக்கு கருணை அடிப்படையிலும், தொழிலாளர் நலத்துறையில் பணியின் போது இறந்த பணியாளர்களின் வாரிசுகள் 12 பேர், தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து முறையான சம்பள விகிதத்தில் நியமிக்கப்பட்ட பணிமனை உதவியாளர்கள் 73 பேர், தொழிற்சாலைகள் துறையில் உதவி தொழிற்சாலை ஆய்வாளர்களாக 13 பேர் என மொத்தம் 150 பேருக்கு, பணி நியமன உத்தரவுகளை துணை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் துறைச் செயலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply