பீஜிங்:பணியிலிருந்து நீக்கப் பட்ட மனநிலை பாதிக்கப் பட்ட டாக்டர், எட்டு குழந்தைகளை வெட்டிக் கொன்றார். சீனாவில் நடந்த இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ளது நான்பிங் நகரம். இங்குள்ள சமுதாயக் கூடத்தில் டாக்டராக இருந்தவர் செங் மின்ஷெங்(41). சமீபத்தில் இவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனால், மன நலம் பாதித்த மின்ஷெங், நேற்று, பள்ளிக் கூடத்தின் வாசலில் நின்றிருந்த எட்டு குழந்தைகளை வெட்டிக் கொன்றார்.
மேலும், ஐந்து குழந்தைகள் பலத்த காயத்துடன் உயிர் பிழைத் துள்ளனர். போலீசார் விரைந்து வந்து மின்ஷெங்கை கைது செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.இந்த படுகொலையை பார்த்த 20க்கும் அதிகமான குழந்தைகள் பீதியடைந்துள்ளனர். அவர்களுக்கு, மனோதத்துவ டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Leave a Reply