பாரத ஸ்டேட் வங்கியில் தங்க விற்பனை திட்டம்

3201520மதுரை: பாரத ஸ்டேட் வங்கியில் தங்க விற்பனை திட்டம், மதுரை மெயின் கிளையில் துவங்கப்பட்டது. வங்கி முதன்மை மேலாளர் அழகுராஜன் தலைமை வகித்தார்.

முதல் விற்பனையை துவக்கி வைத்த மண்டல மேலாளர் ராமானுஜம் கூறுகையில்,” சென்னை, மதுரையில் மட்டும் தங்க விற்பனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. மதுரையில் முதன்முறையாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. ஒரு கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட எடைகளில் தங்கக் கட்டிகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கலாம். நகை வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்க, வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் இனி ஏற்படாது. போக்குவரத்து செலவு, பயண நேரம் குறைவதுடன் பாதுகாப்பு பற்றிய பயமும் தீர்கிறது,” என்றார்.

தங்கக்கட்டிகள் 995.99 சதவீதம் சுத்தமாக கிடைக்கிறது. சர்வதேச சந்தை விலையில், தங்கத்தின் விலை டாலரில் நிர்ணயிக்கப்பட்டு, அதற்குரிய இந்திய மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. நேரடியாக பணம் செலுத்தியோ, வங்கியில் கடன் வாங்கியும் பெறலாம். பிற வங்கி வாடிக்கையாளர்களும் இவ்வசதியைப் பெறலாம். மதுரை மாவட்ட வைரம், தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெகனாதன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். எம்.ஏ.வி.எம்.எம்., சபைத் தலைவர் பாஸ்கரன், வங்கி உதவிப்பொது மேலாளர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *