பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன்சிங் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பபெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.
ஆனாலும் நேற்று முன் தினம் இதுபற்றி காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது. நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். அப்போது விலை உயர்வு வாபஸ் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று சோனியா காந்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய சோனியா பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது என்று கூறியுள்ளார்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, உளவு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Leave a Reply