ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்த நடவடிக்கையில் தலைமை ஏற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.
சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பெறும் தேவையிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக் குழு அறிவித்திருந்த நிலையில் மானவடு இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார்.
சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக மானவடுவைத் தவிர ஏனைய அனைத்து இராணுவ அதிகாரிகளிடமும் வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மானவடு தனது மனைவியை வெளிநாடு அனுப்பிவைத்தார்.
அத்துடன் மானவடு கடந்த சில தினங்களாக பெரும் மன உளைச்சலுடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Leave a Reply