பெண்கள் இடஒதுக்கீடு மசோதா கருணாநிதி உதவி இல்லாமல் நிறைவேற்றி இருக்க முடியாது: சோனியா காந்தி

posted in: மற்றவை | 0

593686de-ad0b-4a3e-8e3e-add28a7a4b91_s_secvpfசென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற புதிய சட்டமன்ற-தலைமைச் செயலக வளாக திறப்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகித்து பேசியதாவது:-

தமிழக சட்டசபையை அலங்கரித்த மாபெரும் தலைவர்களை நினைவுகூரும் இந்த வேளையில், நமது இந்திய அரசியலைப்பின் கூட்டாட்சி தத்துவத்தினை அடிக்கோடிட்டு காட்டவேண்டியது அவசியமாகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானதில் இருந்தே, அந்த கூட்டணிக்கும், எனக்கும், பிரதமருக்கும் வலிமையும், நம்பிக்கையும் தரக்கூடிய முக்கிய தூணாக கருணாநிதிதான் விளங்கி வருகிறார்.

மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா பற்றி முதல்- அமைச்சர் கருணாநிதி இங்கு பேசினார்.

அவரது ஆதரவு இல்லாமல், அந்த சட்டமசோதா நிறைவேறியிருக்க முடியாது.

அதற்காக எனது நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *