பென்னாகரம் தொகுதி தேர்தல் விதிமுறை மீறல் புகார் பற்றி விரைவாக தீர்வு எடுக்கப்படும்; நரேஷ்குப்தா

posted in: அரசியல் | 0

5396f738-d2aa-4019-896e-e555c5f165b1_s_secvpfதர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்துதல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் நிலைக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அமுதா முன்னிலை வகித்தார்.

கூட்டத்துக்கு பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்தும், தேர்தலை சுமூகமாக நடத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் அரசியல் கட்சி பிரமுகர்களிடமிருந்து தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

இதில் பெரும்பாலான அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்கள், கூடுதலான வாகனத்தை பயன்படுத்துவதாகவும், தேர்தல் செலவுகள் அதிகமாக மேற்கொள்வதாகவும், அரசியல் கட்சி கட்-அவுட்கள், விளம்பரங்கள் அதிக அளவில் வைத்து போக்குவரத்து சாலைகளில் இடைïறு ஏற்படுத்துவதாகவும் புகார்கள் தெரிவித்தனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிக்க சிலர் பணம் கொடுக்க முயல்வதாகவும் கூறினர். இந்த புகார்கள் குறித்து உடன் பரிசீலனை செய்து, விரைவில் உரிய தீர்வுகள் எடுக்கப்படும். இதே போன்று வேட்பாளர்களின் செலவுகள் குறித்து கண்காணிக்க கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பார்வையாளர்களால் கூர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகார்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு செலவுகள் கூடுதலாக கண்டறியப்பட்டாலும், கட்சி கட்-அவுட்கள், விளம்பர பலகைகள், கூடுதல் மின் விளக்குகள் உபயோகப்படுத்தப்பட்டாலும் அது அந்த வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நிகழ்வுகள் கண்காணிக்கப்பட உள்ளது. இதேபோல், ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவு நிகழ்வுகளை கண்காணிக்க தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவைகளும் கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு, தேர்தல் பார்வையாளர்களால் செலவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு நரேஷ்குப்தா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *