மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் சென்ட்ரல் மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சென்ட்ரல் மாஸ்கோ அருகே லுபியாங்கா மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் உள்ளது.
வழக்கமான ரயில்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. திடீரென இங்கு பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்தில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும் , காயமுற்றவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் பணி முடுக்கு விடப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
இந்த குண்டு வெடிப்பில் ரயிலில் பயணித்தவர்கள் , பிளாட்பாரத்தில் நின்றவர்கள் என கொல்லப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதல்களாக இருக்குமோ என்ற கேள்விக்கு போலீசார் தற்போது எதுவும் கூற முடியாது விசாரிக்கப்பட்டு வருகிறது என்றனர். முதலில் ஒரு குண்டு வெடிப்பு நடந்ததாகவும், சில நிமிடங்களில் அருகில் உள்ள பார்க் கல்ட்ரி என்ற மற்றொரு ஸ்டேஷனில் குண்டு வெடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செசன்ய பயங்கரவாதிகள் தாக்குதலா ? : ரஷ்யாவில் நடந்துள்ள குண்டு வெடிப்பு அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் ரயிலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது அங்குள்ள செசன்ய பயங்கரவாதிகளின் செயலாகவே கடந்த காலத்தில் இருந்திருக்கிறது. இதுவும் இந்த பயங்கரவாத தாக்குதலாக இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடும் ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
Leave a Reply