கொல்கத்தா: 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரைப் போலவே நடந்து விட்டது நேற்று சென்னை [^], கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் மோதல்.
2008ம் ஆண்டு நடந்த முதலாவது ஐபிஎல் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி கொல்கத்தாவை நிலை குலைய வைத்தது.
அதேபோல நேற்றும் நடந்தது. வேடிக்கை என்னவென்றால், 2008ல் தனது முதல் இரு போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் [^] மற்றும் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளை வீழ்த்தியிருந்தது. இந்த ஐபிஎல் தொடரிலும் அதேபோல மேற்கண்ட அணிகளை வீழ்த்தியிருந்தது.
2008ல் நடந்த மூன்றாவது போட்டியில் சென்னையிடம் வீழ்ந்தது. இப்போதும் அதே சென்னை அணியிடம் வீழ்ந்து விட்டது கங்குலி தலைமையிலான கொல்கத்தா அணி. 2008 மாதிரி ஆகி விடுமோ என்று பயந்து கிடந்த ரசிகர்களின் பயம் நிஜமாகி விட்டது.
நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர்கள், கொல்கத்தா பேட்டிங்கை சிதறடித்து 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி [^] தேடித் தந்தனர்.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் ஆரம்பம் முதலே பதட்டமின்றி ரன் சேர்த்து வந்தார். ஆனால் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான மாத்யூ ஹெய்டன் மிகவு்ம் தடுமாற்றத்துன் ஆடி 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் விஜய்யும், சுரேஷ் ரெய்னாவும் கை கோர்த்தனர். இருவரும் அடித்து ஆட முயன்றனர். இந்த முயற்சியில் சுரேஷ் ரெய்னா 18 ரன்களில் ஹாட்ஜிடம் வீழ்ந்தார். மறுபக்கம் முரளி விஜய் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பத்ரிநாத்தும், டோணியும் சேர்ந்துதான் அணியின் ஸ்கோரை கெளரவமான எண்ணிக்கைக்கு உயர்த்த உதவினர். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. டோணி 66 ரன்கள் எடுத்தார். பத்ரிீநாத் 43 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், 3 விக்கெட்களை இழந்த சென்னை 164 ரன்களை எடுத்தது.
இஷாந்த் சர்மா, எல்.ஆர்.சுக்லா, பிராட் ஹாட்ஜ்ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
பின்னர் ஆடத் தொடங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்திலிருந்தே அடிபடத் தொடங்கியது.
ஹாட்ஜ் 0, மனோஜ் திவாரி 8, கங்குலி 11 ரன்களில் வீழ்ந்தனர். விருத்திமான் 22 ரன்கள் சேர்த்தார். ஓவைஸ் ஷாவின் பங்கு வெறும் 5. ஏஞ்செலோ மாத்யூஸ் எடுத்தது 6.
முரளி கார்த்திக் [^] 21 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். எந்த வீரரையும் எழும்ப விடாமல் செய்து விட்டது சென்னை அணியின் ஆல் ரவுண்ட் பவுலிங்.
இறுதியில், 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்துப 109 ரன்களில் சுருண்டு போனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஜஸ்டின் கெம்ப் 3 விக்கெட்களை சாய்த்தார். பாலாஜி 2 விக்கெட்களை வீழ்த்தினார். அஸ்வின், முரளிதரன், அல்பி மார்க்கல், கோனி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பெங்களூருக்கு முதல் வெற்றி…
முன்னதாக நடந்த போட்டி ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி பெற்றது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 202 ரன்களைக் குவித்தது. கல்லீஸ் அபாரமாக ஆடி 89 ரன்களைக் குவித்தார். உத்தப்பா மின்னல் வேகத்தில் ஆடி 51 ரன்களைக் குவித்தார்.
இந்த வெற்றி தற்போதைய ஐபிஎல் தொடரில் பெங்களூர் பெற்றுள்ள முதல் வெற்றியாகும்.
Leave a Reply