சென்னை: அமெரிக்காவின், பிரபல மோட்டார் வாகன உதிரி பாக தயாரிப்பு, ‘போர்க்வார்னர் இன்க்’ நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் தனது தொழிற்சாலையை திறந்துள்ளது.
இது குறித்து, ‘போர்க்வார்னர் இன்க்’ நிறுவனத் தலைவர் டிம்மென்கன்லோ, போர்க்வார்னர் தெர்மல் டிவிஷன் தலைவர் டேன்கெசன்டா, ரோஜர்வுட், போர்க்வார்னர் கூலிங் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவன மேலாண் இயக்குனர் உமாசங்கர் ஆகியோர் கூறியதாவது: கனரக மோட்டார் வாகன உதிரிபாகங்கள், சிஸ்டம் அமைப்புகளை 18 நாடுகளில் தயாரிக்கிறோம். கடந்த 2004ம் ஆண்டு சென்னை அயனம்பாக்கத்தில், சிறிய அளவில் உற்பத்தி துவங்கியது. தற்போது ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் பூங்காவில், புதிய தொழிற்சாலையை திறந்துள்ளோம். கடந்த ஆண்டு, எங்கள் விற்பனை 49 கோடி ரூபாய். இந்த ஆண்டு அது 65 கோடி ரூபாயாக உயரும். இந்தியாவிற்கு ஏற்ப பொருட்களை தயாரிப்பது எங்கள் திட்டம். இங்கிருந்து அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அப்போது, அமெரிக்க துணைத் தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின் உடன் இருந்தார்.
Leave a Reply