சென்னை : யுவராஜ் சிங் தனக்கு தம்பி மாதிரி என, பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரித்தி ஜிந்தா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ‘மன்மதன்’ என வர்ணிக்கப்படுபவர்யுவராஜ். இவரது வலையில் கிம் சர்மா முதல் தீபிகா படுகோனே வரை, நிறைய பாலிவுட் நட்சத்திரங்கள் சிக்கியுள்ளனர். இந்த முறை ஐ.பி.எல்., கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன்பதவியில் இருந்து நீக்கப் பட்டார். பின் புதிய கேப்டனாக சங்ககரா நியமிக்கப் பட்டார். இதனால் அதிருப்தியடைந்த யுவராஜ் கூறுகையில்,”அணியின் முக்கிய கேப்டன் பிரித்தி ஜிந்தா தான். கிரிக்கெட் தொடர்பாக நிறைய கற்றுக் கொண்டுள்ளார். ஒரு குடும்பம் போல அணியை பார்த்துக் கொள்கிறார். வீரர்களுக்கு சிறந்த உணவு, மற்றும் உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கிறார். அனைவரும் சகோதரியாக பார்த்தாலும், நான் மட்டும் அப்படி நினைக்கவில்லை,” என, நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
இதையடுத்து யுவராஜ்(28)-பிரித்தி ஜிந்தா(35) தொடர்பாக அதிகம்கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் மிகவும் நெருக்கமாகபழகுவதாக கூறப்பட்டது. இதனை கேட்ட பிரித்தி ஆவேசமடைந்தார்.
இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பஞ்சாப் அணி தோல்வி அடைய, ‘கட்டிப்புடி வைத்தியத்தை’ கைவிட்ட இவர் கூறுகையில்,”தப்பா பேசாதீங்க ப்ளீஸ்… யுவராஜ் எனக்கு தம்பி மாதிரி. பஞ்சாப் அணி எனது குடும்பம் போன்றது. நாங்கள் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவு தான்,”என்றார்.
Leave a Reply