டெல்லி: அம்பானிகள், டாடா-பிர்லாக்களும் இனி வங்கிகள் துவங்கப் போகிறார்கள்.
வங்கிகள் நடத்த தனியார் துறையினருக்கும் அனுமதி அளிக்கும் திட்டம் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி,சில தினங்களுக்கு முன் பட்ஜெட் உரையின்போது குறிப்பிட்டார். இதுகுறித்த பரிசீலனையை ரிசர்வ் வங்கி துவங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து அம்பானி குழுமங்கள், பிர்லா குழுமம், பஜாஜ், டாடா என நிதித் துறையில் முன்னணியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் வங்கி ஆரம்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஸ்ரீராம் குழுமமும் இதில் ஆர்வம் காட்டி வருகிறது.
எழுபதுகளுக்கு முன்பு வரை நாடு முழுக்க தனியார் வங்கிகள்தான் கோலோச்சின.
“தனியார் வங்கிகளின் சுயநல போக்கு, மக்களைச் சுரண்டவே பயன்படுகிறது.. அதிக வட்டி விகிதம் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது” என்ற எண்ணம் காரணமாக, அனைத்து தனியார் வங்கிகளையும் நாட்டுடைமையாக்கினார் மறைந்த பிரதமர் இந்திராகாந்தி.
இப்போது மீண்டும் தனியார் துறை வங்கிகள் பெருமளவில் கால்பதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
Leave a Reply