வடக்கு நீதிமன்றக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இதன்படி தற்போது வடக்கு நீதிமன்றக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமானசிங்கம் தலைமையிலான விசேட குழுவினர் வடக்கு நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பில் ஆராய உள்ளனர்.
உட்கட்டுமான வசதிகள், பணியாளர் பற்றாக்குறை போன்ற சகல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது
Leave a Reply