வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கம்: பா.ம.க., நிழல் பட்ஜெட்டில் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_46551150084சென்னை:பா.ம.க.,வின் 8வது நிழல் பட்ஜெட்டை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், சென்னையில் நேற்று வெளியிட்டார். “வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் விவரம்:பா.ம.க.,வின் நிழல் பட்ஜெட், தமிழக அரசு தயாரிக்கும் பட்ஜெட்டிற்கு முன் னோட்டமான ஓர் அறிக்கை. பா.ம.க., தற்போது அரசை ஆண்டு கொண்டிருந்தால் அது இந்த ஆண்டு எவ்விதமான பட்ஜெட்டை சட்டசபையில் சமர்ப் பிக்கும் என்பதை, நிழல் பட்ஜெட் உணர்த்துகிறது.

மத்திய அரசு நிதியிலிருந்து 50 சதவீதத்தை அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து தர வேண்டும் என்பதே பா.ம.க., வின் நிலை. மத்திய, மாநில மறைமுக வரிவிதிப்பு முறைகளுக்கு மாற்றாக ஏப்ரல் மாதம் கொண்டு வரப்படவுள்ள பொருட்கள் மற்றும் பணிகள் வரி, மாநில அரசுகளின் ஒருமித்த கருத்தின்படி கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும்.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு நேரடியாக நிதியுதவி அளிக்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இந்த நேரடி நிதியுதவி அளிக்கும் திட்டத்தின்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 1,000 ரூபாய் மாதந்தோறும் நிதியுதவியாக அளிக்கப்படும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் இதர தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட பழங்குடியின மாணவர்களின் முழுமையான கல்விக் கட்டணங்களை அரசு செலுத்தும். சிறப்பு வேளாண், பொருளாதார மண்டலங்களை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.ஒரு சுதந்திரமான வல்லுனர் குழுவை நியமித்து மின்வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் மாநில அரசின் மின்சாரம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்து, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

மாவட்ட தலைநகரங்கள் அளவில் பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டு, குடியிருப்புகள் ஏற்படுத்தி தரப்படும்.அரசு ஒவ்வொரு திட்டத்திலும் பெண்கள் சிறப்பு கூறுத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு, திட்டத்தின் 40 சதவீதம் ஒதுக்கீடு பெண்களுக்காக செலவிடப்படும். ஐகோர்ட்டில் நீதிபதி நியமனத்திலும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வேல்முருகன் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *