சென்னை : ‘சிறு விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்துறை அமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பு: திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், மின்துறை அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனுவில், ‘விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது’ என கோரியுள்ளனர். மின்சார வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டண மாற்றம் பற்றி கொடுத்துள்ள விண்ணப்பத்தில், விசைத்தறி நெசவாளர்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்தும் படி கேட்டுக் கொள்ளவில்லை. இதனால், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் 500 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும். இலவச மின்சாரம் ரத்தாகிறது என்பது வதந்தி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply