விமான நிலையங்கள் மீது தாக்குதல் அபாயம் : புதிதாக எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நேரத்தில் விமான நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அதிகப்படியான சேதத்தை விளைக்கத் திட்டமிட்டிருப்பதாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது, விமான நிலையங்களின் பாதுகாப்பை சி.ஐ.எஸ்.எப்., மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த எம்.எஸ்.பாலி கூறியதாவது: பயங்கரவாதிகள், விமான நிலையங்களை அவற்றின் முன்புறமிருந்து தாக்கக் கூடும். போக்குவரத்து உச்சகட்டத்தில் இருக்கும்போது, அவர்கள் தாக் கக் கூடும். அதன் மூலம் அதிகப் படியான சேதத்தை விளைவிப் பது தான் அவர்களின் நோக்கம். அவர்களை எல்லா விதத்திலும் எதிர்கொள்ளும் நிலையில் நாம் இருக்க வேண்டும். குறிப் பாக, நகரங்களிலுள்ள பெரிய விமான நிலையங்களில் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒருமுறை தாக்கியதைப் போல மறுமுறை அவர்கள் தாக்குவதில்லை. தாக்குதல் வழிமுறையை அவர்கள் மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். இது ஒரு பார்வை தான். எனது கருத்து சரியாகவோ தவறாகவோ இருக்கலாம். எதிர்காலத்தில் பயங்கரவாதிள் நேரடியாகவே விமான நிலையங்களை தாக்கக் கூடும். இவ்வாறு பாலி தெரிவித்தார்.

சி.ஐ.எஸ்.எப்., இயக்குனர் ஜெனரல் என்.ஆர்.தாஸ் கூறுகையில், “பெரிய விமான நிலையங்களான மும்பை, டில்லி போன்றவற்றின் பாதுகாப்புப் பலப்படுத்தப்படும். டில்லியில் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. “மும்பையில் அதற்கான ஏற் பாடுகள் நடந்து வருகின்றன. ஊடுருவலைத் தடுக்கும் வகையில், நவீன தொழில் நுட்பத் தில் உருவாக்கப்பட்ட புதிய கருவி ஒன்று அடுத்த மாதம் டில்லி விமான நிலையத்தில் பொருத் தப்படும். அதேபோல், “பெரிமீட்டர் ஊடுருவல் தடுப்புக் கருவி (பி.ஐ.டி.எஸ்.,) ஏப்ரலில் விமான நிலையத்தைச் சுற்றி 37 கி.மீ., தூரத்துக்குள் பொருத் தப்படும்’ என்றார். இந்த புதிய திட்டத்தின் மூலம் சட்டவிரோதமாக விமான நிலைய வளாகத் துக் குள் ஊடுருவல் நடந்தால் கண்டுபிடித்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *