டெல்லி: வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கைப்பற்றுவதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் (ரூ.90 ஆயிரம் கோடி) அளவுக்கு முதலீடு செய்ய தயாராக இருப்பதாக ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஓஎன்ஜிசி தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆர்.எஸ்.ஷர்மா கூறுகையில்,
‘வெளிநாடுகளில் உள்ள வளங்களை கையகப்படுத்துவது குறித்து எந்த முடிவும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், அவற்றின் மதிப்பு சுமார் 19 பில்லியன் டாலர் என தெரிகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்த வளங்களுக்காக முதலீடு செய்ய ஓஎன்ஜிசி தயாராக இருக்கிறது.
ஏற்கனவே ஓஎன்ஜிசியின் வெளிநாட்டு முதலீட்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை தொட்டுள்ளது’ என்றார்.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ரஷ்யாவின் ஷாகாலின் எண்ணெய் வயலில் தனியொரு நிறுவனமான 5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
இதுதவிர கஜகஸ்தான், அங்கோலா, நைஜீரியா, சூடான், சிரியா, க்யூபா, பிரேசில், கொலம்பியா, வியட்னாம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலும் ஓஎன்ஜிசி முதலீடுகள் செய்துள்ளது.
Leave a Reply