வெளிநாட்டு பல்கலைகளுக்கு அனுமதி வீண்: நோபல் ராமகிருஷ்ணன் பேட்டி

posted in: உலகம் | 0

tblworldnews_72930544615லண்டன்:இந்தியாவில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படுவதால் பெரிய பலன் ஏதும் ஏற்படாது என, நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நிருபர்களிடம் ராமகிருஷ்ணன் கூறியதாவது:வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியா உள்ளிட்ட இடங்களில் பல்கலைக்கழகத்தை அமைக்க முன் வருவதன் முக்கிய நோக்கம் வர்த்தகம் தான். வெளிநாடுகளில் அமைக்கப்படும் இது போன்ற பல்கலைக் கழகங்களால் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்றவை மற்ற இடங்களில் துவக்கப்பட்டாலும் அதன் தனித்துவம் கிடைக்காது.

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டால், ஆசிரியர்களுக்கு சர்வதேச தரத்தில் சம்பளம் கிடைக்கும். இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.இந்திய அரசு அறிவித்துள்ள பத்ம விபூஷண் விருதை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன். நோபல் பரிசு பெற்றதன் மூலம் தான் என்னை உலகம் அடையாளம் கண்டு கொண்டது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் இந்தியாவிலிருந்து எனக்கு இ-மெயில் மூலம் பாராட்டுக்கள் குவிந்தன. இந்த பாராட்டால் உண்மையில் பீதியடைந்து விட்டேன். என்னுடைய தினசரி வாழ்க்கையை இந்த கடிதங்கள் பாதித்ததால் எரிச்சலடைந்தேன். என்னிடமிருந்து எந்த அறிவுரையையும் இந்தியர்கள் எதிர்பார்ப்பதாக நான் கருதவில்லை.கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வேன். மூன்று வார காலம் அங்கு தங்கியிருப்பேன். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட கல்வி நிலையங்களில் உரையாற்றுவேன்.இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *