திண்டுக்கல்:ரேஷன் கடைகளுக்கு தேவையான எடையாளர், விற்பனையாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பொதுவிநியோக திட்டத்தில் எந்த வித குறைபாடும் இல்லாமல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.
ரேஷன் கடைகளில் பொருட்களை பெறுவோருக்கு வழங்கும் பில்லில் முழு விவரமும் தெரிவதில்லை என்ற குறைபாட்டை களைய பில்லிங் மிஷின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எடை குறைவை தடுக்க அனைத்து கடைகளுக்கும் எலக்ட்ரானிக் தராசுகள் வழங்கப் பட்டுள்ளன. மேலும் பணியாளர்கள் இல்லாததால் பொருட்கள் வழங்குவதில் தாமதம் என்ற நிலை நீடிப்பதால் அனைத்து கடைகளுக்கும் விற்பனையாளர், எடையாளர் நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தேவைப்படும் விற்பனையாளர், எடையாளர் பட்டியலை கூட்டுறவுத்துறையினர் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வழங்கியுள்ளனர். எடையாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
Leave a Reply