ஐதராபாத் : அடுத்த 10 ஆண்டுகளில் 400 புதிய விமான நிலையங்கள், 3,000 விமானங்கள் நம்நாட்டுக்கு தேவை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான போக்குவரத்து சார்பில், சர்வதேச விமான கண்காட்சியும், பன்னாட்டு விமான போக்குவரத்து மாநாடும் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் கண்காட்சியை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் விமான பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 18 சதவீதம் அதிகரித்து வருவதாக மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கிறது. அதற்கேற்ப அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 3,000 விமானங்கள் தேவைப்படும். அவற்றை எளிதாக இயக்க வசதியாக 400 புதிய விமான நிலையங்களை அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று கூறினார்.
Leave a Reply