பென்னாகரம்:”பென்னாகரத்தை இப்போது, ‘பொன்’ நகராமாக மாற்றுவேன் என, சொல்லுபவர் பத்து ஆண்டு ஆட்சியில் ஏன் மாற்ற வில்லை,” என, ஜெயலலிதாவுக்கு, விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.பென்னாகரம் தொகுதியில் மூன்றாவது நாளாக நேற்று தே.மு.தி.க., வேட்பாளர் காவேரிவர்மனை ஆதரித்து பி. அக்ரகாரம், சின்ன அள்ளி, தண்டுகாரப்பட்டி, குரும்பட்டி உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது.தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா, ‘பென்னாகரத்தை, ‘பொன்’ நகரமாக மாற்றுவேன்’ என, கூறியிருக்கிறார்.
பத்து ஆண்டுகால ஆட்சியில் பொன் நகரமாக மாற்றாமல், தகரமாக ஏன் வைத்திருந்தார்.பஞ்சம் பிழைக்க சென்றவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருந்தால், ஏன் வெளியூர் போகின்றனர். ஏதாவது செய்திருந்தால், திண்ணையில் உட்கார்ந்து ஏன் பிரசாரம் செய்ய வேண்டும். இதுவரை எதுவும் செய்யாதவர்கள் தான் மீண்டும் எல்லாம் செய்கிறோம் என, பொய் சொல்லுகின்றனர்.தேர்தலில் 50 கோடியை செலவு செய்தவர்கள், 500 கோடியை சம்பாதிக்கின்றனர். 27ம் தேதி வரை பென்னாகரம் தொகுதி மக்களின் காலை கழுவி பூஜை செய்ய சொன்னாலும் செய்வார்கள். அதன் பிறகு, ‘எல்லாமே பழைய குருடி கதவை திறடி’ என்ற கதையாகி விடும். உங்களிடம் கெஞ்சி கேட்கின்றேன், இந்த முறை முரசு சின்னத்தில் ஓட்டுப்போட்டு, எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
Leave a Reply