கொழும்பு:இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையில் கால்களை இழந்த 1,000 தமிழர்களுக்கு, செயற்கை கால்களை வழங்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டு சண்டையில், ஏராளமான தமிழர்கள் காயமடைந்தனர். கண்ணி வெடி மற்றும் வெடி குண்டு தாக்குதல் போன்ற சம்பவங்களால் பலர் கால்களை இழந்தனர்.இவர்களுக்கு, ஜெய்ப்பூரில் தயாரிக்கப்பட்ட செயற்கை கால்களை வழங்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
பகவான் மகாவீர் விக்லங் சமிதி என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம், இந்த செயற்கை கால்கள், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்படுகின்றன. மொத்தம் 1,000 செயற்கை கால்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, நேற்று வவுனியாவில் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 19 பேர் கொண்ட தொழில்நுட்ப குழு ஒன்று, இலங்கையில் முகாமிட்டுள்ளது.
Leave a Reply