ஹெüஸ்டன், ஏப்.11: அமெரிக்காவில் உள்ளமின் தொகுப்புகளில் புதிய தொழில்நுட்பத்தை தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட் செல்வமாணிக்கம் கொண்டு வரவுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஹெüஸ்டன் பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் பொறியியல் துறை பேராசிரியராக வெங்கட் செல்வமாணிக்கம் உள்ளார். அதே நேரத்தில் அப்ளைடு ரிசர்ச் ஹப் அமைப்பின் இயக்குநராகவும் அவர் இருக்கிறார்.
உயர் அழுத்த மின்சாரத்தை கொண்டு செல்லும் புதிய ரக வயர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அவர் கண்டுபிடித்துள்ளார்.
தனது புதிய தொழில்நுட்பம் குறித்து அவர் கூறியதாவது: இந்த வகையான உயர்அழுத்த சூப்பர்கண்டக்டிங் வயர்களை பயன்படுத்தும்போது மின் தொகுப்புக்கு மின் இழப்பின்றி மின்சாரத்தைக் எடுத்துச் செல்லமுடியும்.
ஏற்கெனவே உள்ள தாமிர வயர்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும்போது மின் இழப்பு ஏற்படுகிறது. இந்த வயர்கள் மூலம் பழைய வயர்களைக் காட்டிலும் 10 மடங்கு கூடுதல் மின்சாரத்தை எடுத்துச் செல்ல முடியும் என்றார் அவர்.
இந்த வகையான வயர்களைப் பயன்படுத்தி அமெரிக்காவிலுள்ள மின்தொகுப்புகளை நவீனமயமாக்கவுள்ளார் தமிழரான வெங்கட் செல்வமாணிக்கம்.
Leave a Reply