பொள்ளாச்சி: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 31.55 ரூபாய் விலை கிடைத்தது.
ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 15 பேர் 42 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு எடுத்து வந்தனர். கொப்பரையை நான்கு வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்திரசேகர் ஏலம் நடத்தினார்.
முதல் தர கொப்பரை 35 மூட்டை ஏலம் விடப்பட் டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 27.05 ரூபாய் முதல் அதிகபட்சமாக 31.55 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை ஏழு மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 17.50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 23.50 ரூபாய் வரை விலை கிடைத்தது. அதிகாரிகள் கூறியதாவது: ஒரு மாதமாக கொப் பரை ஏலத்திலும் விலையில் பெரிய மாறுதல்கள் ஏற்படவில்லை. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு 25 பைசா விலை குறைந்துள்ளது. அரசு கொப்பரை கொள்முதலை எதிர்பார்த்து விவசாயிகள் முதல் தர கொப்பரையை இருப்பு வைத்துள்ளனர்’ என்றனர்.
Leave a Reply