லக்னெü, ஏப். 2: ஆளுநரின் உரிய சட்ட அனுமதி இன்றி 1,200 முன்னாள் ராணுவத்தினரை காவல் துறையில் சேர்க்க மாயாவதி தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலித் தலைவர்களின் நினைவிடங்கள் மற்றும் பூங்காக்களை பாதுகாக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவைச் செயலர் எஸ். சேகர் சிங் கூறியுள்ளார். இது தொடர்பான சட்டத்துக்கு ஆளுநரிடம் இருமுறை அனுமதி கோரியும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே ஆளுநரின் அனுமதி இன்றி காவல் துறையில் 1,200 பேரை சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Leave a Reply