மும்பை : இந்தியாவைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அயல்நாடுகளில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவைச் சேர்ந்த தொலை தொடர்பு நிறுவனங்கள், கடலுக்கு அடியில் தொலை தொடர்புக்காக அமைக்கப்படும் சப்மரைன் கேபிள் அமைக்க அதிக முதலீடுகளை செய்ய முடியும். சர்வதேச அளவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட்டமைப்பை உருவாக்கி கடலுக்கடியில் கேபிள் அமைக்கும் பணிக்கான நிதியை பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளன. இதற்கு இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் தடையாக இருந்தன. தற்போது இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளதால், இனி இந்தியாவைச் சேர்ந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்ய முடியும். இந்திய தொலைத் தகவல் தொடர்பு நிறுவனங்கள் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனையை ஏற்குமாறு வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு முதலீடு செய்யும் நிறுவனங்கள் சர்வதேச தொலைத் தகவல் தொடர்புக்கான உரிமம் பெற்று இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Leave a Reply