உங்களிடம் பான்கார்டு உள்ளதா? இல்லையென்றால் நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்

1698376புதுடில்லி: உங்களிடம் பான்கார்டு உள்ளதா? இல்லையென்றால் உடன‌ே பான்கார்டுக்கு அப்ளை செய்யுங்கள்! இல்லையென்றால் உங்கள் வருமான வரி தொகையில் 20 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்.

இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பான்கார்டு(பர்மனென்ட் அக்வுண்ட் நம்பர்) எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை இல்லாதவர்களுக்கு இன்று முதல்(ஏப்ரல் 01ம் தேதி), அவர்களது சம்பாதிக்கும் வருமானத்திற்கு ஏற்ப 20 சதவீத வரி விதிக்கப் படுகிறது.

வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்டுகள் வாயிலான வட்டி வருவாய் மற்றும் இதர வழிமுறைகள் வாயிலாக வருவாய் ஈட்டுபவர்களிடமிருந்து அவர்களது வருவாயில் 2-10 சதவீதம் உடனடியாக அந்த இடத்திலேயே வரியாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இவர்களிடம் சூபான்கார்டு’ இல்லாவிட்டால் அவர்களிடம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 20 சதவீத வரியை வங்கிகள் அல்லது நிறுவனங்கள் உடனடியாக பிடித்தம் செய்துவிடும்.

நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, வருமான வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை 3.30 கோடி என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பான்கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது. இதன் மூலம் யாரும் வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ய முடியாது.

வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லாத மூத்த குடிமக்கள் படிவம் 15-எச் ஐ தாக்கல் செய்து வரி பிடித்தம் செய்வதை தவிர்க்கலாம். இந்நிலையில், இவர்கள் சூபான்கார்டு’ வைத்திருக்காவிட்டால், வட்டி வருவாய் போன்ற வருவாய்களை ஈட்டும்போது, 20 சதவீத வரி உடனடியாக பிடித்தம் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *