புதுடில்லி:அனைத்து விதமான கல்விக் கடன்களுக்கும் செலுத்தப்படும் வட்டிக்கு வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது இன்ஜினியரிங்கில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்கள், மருத்து வம் படிப்பவர்கள், மேலாண்மை கல்வி பயில்வோர், கணிதம், புள்ளியியல் உட்பட அறிவியல் முதுகலை பட்டப் படிப்பு பயில்வோருக்கு வழங்கப்படும் கல்விக் கடனுக்கான வட்டிக்கு, வரித் தள்ளுபடி சலுகை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வருமானவரிச் சட்டம் பிரிவு 80இ-யில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தொழில் கல்விக்கான கடன் உட்பட அனைத்து விதமான கல்விக் கடன்களுக்கான வட்டிக்கும் வரித்தள்ளுபடி சலுகை அளிக்கப்படும்.இதனால், வரும் கல்வி ஆண்டு முதல்,பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட் டப் படிப்பு படிக்க விரும்புவோர் கல்விக் கடன் பெற்றால், அதற்காக செலுத்தப்படும் வட்டிக்கு வரித்தள்ளுபடி சலுகை பெறலாம்.இத்தகவலை மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மத்திய அரசின் இச் சலுகையால் நிறைய மாணவர்கள் பலன் அடைவர்.
Leave a Reply