திருவனந்தபுரம், ஏப். 12: கேரளத்தில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டி, மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில கல்வித் துறை அமைச்சர் எம்.ஏ. பேபி தெரிவித்ததாவது:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள கட்டாயக் கல்வி சட்டத்தின் பயன்களை கேரளம் ஏற்கெனவே அடைந்துவிட்டது. கட்டாயக் கல்வி சட்டத்தின்படி 14 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். ஆனால், கேரளத்தில் 16 வயதுவரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த திட்டத்தின் பயனை கேரளம் எற்கெனவே அடைந்துவிட்டது.
இந்த காரணத்தால், கட்டாயக் கல்வி சட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி உதவி கேரளத்திற்கு கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.
எனவே, கேரளத்தின் முன்மாதிரி நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். கல்வித்துறையில் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், கல்வித்தரத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கும் இந்த நிதி உதவியாக இருக்கும் என்றார் அமைச்சர் பேபி.
Leave a Reply