புதுடில்லி: ‘பொருட்களின் விலை, வட்டி வீதம் மற்றும் எக்சைஸ் வரி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால், கார் தயாரிப்பாளர்கள், தங்களின் உற்பத்தி பொருள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்’ என, இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பவன் கோயங்கா கூறியதாவது: உருக்கு, ரப்பர், துத்தநாகம், காப்பர் மற்றும் ஈயம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. மேலும், புதிய விதிமுறைகள், வட்டி வீதம் அதிகரிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால், கார் தயாரிப்பாளர்கள், தங்களின் உற்பத்தி பொருளின் விலையை 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை, அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கார்களின் விலையை உயர்த்தினால், விற்பனை பாதிக் கப்படும். நாட்டின் உள்கட்டமைப்பில், அரசு செலுத்தியுள்ள கவனம் மற்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சில வரி குறைப்புகள், பொதுமக்கள் கையில் பணம் சென்றடைவதை உறுதிப்படுத்தி உள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவு, வளர்ச்சியடைவதற்கான முக்கிய காரணியாக திகழும். இவ்வாறு பவன் கோயங்கா கூறினார்.
Leave a Reply