கொழும்பில் நடைபெறும் திரைப்பட விழாவை தமிழ் நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும்: சீமான்

posted in: மற்றவை | 0

seemaan003கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை தமிழ் திரைப்பட நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் தனது அறிக்கையில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.


சென்ற வருடம் இதே நேரம் எம் ஈழ தேசத்தில் லட்சக்கணக்கான தமிழர்களின் வீடுகளில் மரண ஓலம் கேட்ட்து.அந்த கொடூரத்தில் இருந்து தமிழர்கள் இன்று வரை மீள வில்லை.லட்சக்கணக்கான தமிழர்களின் குருதியில் நனைந்த சிங்கள ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் இப்பொழுது தனிமைப்பட்டு இருக்கின்றது, தமிழர்கள் உண்ண உணவின்றி உடுத்த துணியின்றி உயிர் வாழ மருந்துப்பொருட்களின்றி நித்தமும் செத்துக்கொண்டிருக்கின்றார்கள்.உலகம் முழுவதும் உள்ள நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

ஐரோப்பா ஒன்றியம் இலங்கையில் தனது வரிச்சலுகைகளை நீட்டிப்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த வரிச்சலுகை. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவாகும். மேலும் அண்மையில் நடைபெற்ற டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையின் நற்பெயரை கிழித்தெறிந்து, அதனை போர்க்குற்றவாளியாகவும் அறிவித்துள்ளது.இத்தகைய சமீபத்திய நிகழ்வுகள் இலங்கையை இனப்படுகொலை நாடாகவும்,பாதுகாப்பற்ற நாடாகவும், விரும்பத்தகாத ஜனநாயகமற்ற நாடாகவும் நிலைநிறுத்துகின்றன.. இதனாலேயே அன்னிய நிறுவன்ங்கள் இலங்கையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் இலங்கையோ தனது நாட்டை அனைவருக்கும் ஏற்ற நாடு என்று காட்டவும் சொர்க்க புரி என்று உலகிற்கு சொல்லவும் கடும் முயற்சி எடுத்துகொண்டிருக்கின்றது

இலங்கைக்கு ஏற்கனவே பல்வேறு வகைகளில் உதவிபுரிந்த இந்திய அரசு இதற்கும் உதவி செய்துள்ளது.பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.அதன் ஒரு கட்டமாக கொழும்பு நகரில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் 2 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை நட்த்த திட்டமிட்டுள்ளது. IIFA விருது என்பது பாலிவுட்டின் ஆஸ்கார் போன்றதாகும். உலகில் ஆஸ்காருக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான நிகழ்ச்சியென IIFA விருது மதிப்பிடப்படுகிறது..

பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப்பச்சன்,ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் விழாமேடையில் தோன்றி இந்த விழாவிற்கு வலு சேர்க்க இருக்கின்றார்கள். மேலும் இந்த விழாவில் சில தமிழ் திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கின்றது. தமிழ் திரைப்பட நடிகர்கள் சிலரும் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கின்றார்கள்.

இந்திய திரைப்பட்த்துறை உதவியுடன் சிங்கள அரசு மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழினப்படுகொலையை உலகின் கவனத்தில் இருந்து மறைக்கவே உதவும்.உலகில் சிங்கள ஏகாதிபத்தியம் அம்பலப்பட்டு இருக்கும் இந்த வேளையில் அதனை மறைக்க உதவும் இந்த விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை நாம் தமிழர் இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.அதற்கு பல்வேறு வழிகளில் எதிர்ப்பைக் காட்டவும் முடிவு செய்துள்ளது,முதற்கட்டமாக நடிகர் அமிதாப் அவர்களை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வரும் ஞாயிறு அன்று ஜனநாயக முறைப்படி சந்தித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.

மேலும் தமிழ் நடிகர்கள் சிலர் இந்த விழாவில் பங்கேற்க மறுத்துள்ளதை வரவேற்கின்றோம்.பிற நடிகர்களும் பங்கேறகமாட்டார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.தமிழ்ப்படங்கள் திரையிடுவதை தயாரிப்பாளர்கள் தவிர்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்..இந்த நிகழ்ச்சிக்கு எதிராக பல்வேறு வகைகளிலும் நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் தொடரும்.மரண் ஓலமும் ஒப்பாரியும் கேட்டுக்கொண்டிருக்கும் எம் தமிழர் இல்லங்களில்,அவர்களின் ரத்தக்கறையின் மீது நின்று எம் இனத்தை அழித்த எதிரியின் வெற்றிக்களிப்பில் இணைவதை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம்.தமிழினப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படும் வரை ஓய மாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *