மும்பை, மார்ச் 31: குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்கள் வீசப்படாததால் மும்பை இண்டியன்ஸ் அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதே காரணத்துக்காக அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
÷கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை மும்பையில் நடந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் வெற்றி பெற்றது. குறிப்பிட்ட நேரத்துக்குள் குறைவாக ஓவர்கள் வீசப்பட்டதால் மும்பை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே காரணத்துக்காக மும்பை அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
எனவே அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் இதற்கு பொறுப்பாவதால், அவர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply