சென்னை:”சிறுபான்மை மற்றும் இதர மொழிகளுக்கு சமச்சீர் கல்வி எதிரானது அல்ல. நான்காம் தொகுப் பில் எந்த மொழியையும் படிக்க தடையில்லை,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நேற்று நடந்த விவாதம்:
சபா ராஜேந்திரன் – தி.மு.க: தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென்ற, பிற்படுத்தப்பட்டோரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு 27 சதவீத இடஒதுக்கீடு அளித்தும், ‘கிரீமி லேயர்’ எனக் கூறி, பொருளாதார ரீதியாக வசதியானவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. அதை நீக்க வேண்டும். கிறிஸ்தவ வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலில் ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. அதை வழங்க வேண்டும்.
ஹசன் அலி – காங்கிரஸ்: 1991ம் ஆண்டுக்கு பின் துவக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிதியுதவி வழங் கப்பட மாட்டாது என, சட்டம் கொண்டு வரப் பட்டது. 20 ஆண்டுகளாக உள்ள இந்த சட்டத்தால் எத்தனையோ ஆசிரியர் கள் ஆயிரம் ரூபாய்க்கும், இரண்டாயிரம் ரூபாய்க்கும் சம்பளம் பெறுகின்றனர்.
சிறுபான்மையினர் நிலத்தில் கல்வி நிலையம் அமைக்க, எந்த நிதியும் கேட்க மாட்டோம் என்று எழுதித் தந்தால் தான் அனுமதி அளிக்கப்படுகிறது.சமச்சீர் கல்வியில் சில அச்சங்கள் உள்ளன. சென்னையில் 50 சதவீதம் தெலுங்கு பேசுவோரும், 15 லட்சம் உருது பேசுவோரும் உள்ளனர். சமச்சீர் கல்வி வந் தால் தங்கள் கலாசாரம், மொழி, பாரம்பரியம் பாதிக்கப்படுமென அச்சப்படுகின்றனர். அதை போக்க வேண்டும். 12 ஆண்டுகளாக உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை.
அமைச்சர் தங்கம் தென்னரசு: சமச்சீர் கல்வி, சிறுபான்மையினர் அல்லது இதர மொழிகளுக்கு எதிரானது அல்ல. தொகுதி நான் கில் விருப்பப்பாடமாக அவர்கள் விரும்பும் மொழியை படிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த மொழியையும் படிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. சமச்சீர் கல்விக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பல்வேறு பாடத் திட்டங் களை ஒருங்கிணைத்து, மாற்றங்கள் செய்துள் ளோம். மொழி ரீதியாக எந்த அச்ச உணர்வும் தேவையில்லை.
ஹசன் அலி: இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அளித்த பின், இன சுழற்சி முறையில் சில குறைபாடுகள் உள்ளன. அருந்ததியினருக்கு அளித்தது போன்ற முறையை தந்தால், முழு பயனையும் இஸ்லாமியர்கள் அடைய முடியும். கைத்தறி நெசவாளர்களுக்கு 2007 முதல் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதை வழங்க வேண்டும்.
பீட்டர் அல்போன்ஸ்: கடந்த மாதம் டில்லியில் நடந்த சிறுபான்மையினர் நல மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், ‘இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் தமிழகத்தை பின்பற்றி அங்கு எப்படி இடஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளதோ அதுபோல அளிக்க வேண்டும்’ என்றார். மதம் மாறிய கிறிஸ்தவர்களையும் ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இதை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Leave a Reply