மாஸ்கோ, ஏப்.4: விண்வெளி வீரர்கள் மூவருடன் விண்ணில் ஏவப்பட்ட ரஷிய விண்வெளி ஓடம் சோயுஸ், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.
÷இதுகுறித்து ரஷிய விண்வெளி திட்ட கட்டுப்பாட்டு அறை செய்தித் தொடர்பாளர் வேலரி லின்டின் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை டிரேசி கால்டுவெல் டைசன், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்கோவர்த்சோவ், மிகைல் கோர்னியன்கோ ஆகியோருடன் சோயுஸ் விண்வெளி ஓடம் கடந்த வெள்ளிக்கிழமை கஜகஸ்தானிலுள்ள பைகோனூர் விண்வெளி தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
÷இந்த விண்கலம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.26 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 3 நாட்களில் 7 விண்வெளி வீரர்களுடன் அமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணையும். இதில் 3 பெண்களும் அடங்குவர்.
÷மொத்தம் 13 நாட்கள் நிலையத்தில் தங்கியிருந்து விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சியை நடத்துவர். ஒரே சமயத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 பெண்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி நடத்துவது இதுவே முதல் முறை என்றார் அவர்.
Leave a Reply