சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய திட்டம்

சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.

சட்டப் பேரவையில் இத்தகவை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி புதன்கிழமை தெரிவித்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நேற்று நடைபெற்றது.

விவாதத்துக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் கூறியது:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையிலும் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் புதிய திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உற்பத்தி அல்லது சேவை, வணிகம் சார்ந்த தொழில்களைத் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு 15 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.100 கோடியில் 10 ஆயிரம் பேருக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

கூடுதலாக 15 தொழில்கள் சேர்ப்பு: தமிழ்நாடு [^] அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008-ன் படி, மானியம் பெற தகுதியான தொழில்கள் விவரம்:

பாப்கார்ன் மற்றும் ஐஸ்கிரீம் தயாரித்தல், கலப்பு உரம் தயாரித்தல், ஜவுளி ஆலைகள் (நூற்பாலை மற்றும் பின்னலாடை உள்பட), மாவு அரைவு தொழில், உணவு விடுதிகள், சமையல் எண்ணெய் மற்றும் கரைப்பான்கள் உபயோகித்து எண்ணெய் பிரித்தெடுத்தல், அரிசி ஆலை, வெல்லம் தயாரித்தல், போட்டோ எடுத்தல் மற்றும் கலர் போட்டோ தயாரித்தல், ஒளி அச்சு நகல் எடுத்தல், மின் சலவை தொழில், செங்கல் தொழில் (சிமென்ட் ஹாலோ பிளாக், இயந்திரங்கள் மற்றும் நிலக்கரி சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கல் தவிர), காபிக் கொட்டை வறுத்தல் மற்றும் அரைத்தல், கடிகாரம் பழுதுபார்த்தல், ஒளி மற்றும் ஒலி நாடா பதிவு செய்தல் ஆகிய தொழில்கள் மானியம் பெற தகுதியான தொழில்களாக மாற்றியமைக்கப்படும்.

இப்போது இந்தத் தொழில்கள் மானியம் பெற தகுதியற்ற தொழில்களின் பட்டியலில் உள்ளன.

வேலைவாய்ப்பு முகாம்கள்: தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் திறன் படைத்தோர் ஆகியோரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

புதிய நிறுவனங்கள் மானியங்களைப் பெற உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த விண்ணப்ப கால அளவு 6 மாதத்திலிருந்து ஓர் ஆண்டாக உயர்த்தப்படும்… என்றார் அமைச்சர்.

டாம்கோ திட்டத்தின் கீழ் 200 ஆட்டோக்கள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) திட்டத்தின் கீழ், ஆட்டோ தொழில் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக சிறுபான்மையின உறுப்பினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 200 ஆட்டோக்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

இந்தத் திட்டம் தாய்கோ வங்கி மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி.

Source & Thanks : thatstamil.com

147 Responses

  1. jayarambabu

    respected sir ,

    ayya enakku siru tholil thodanga kadan uthavi seiyumaru miga talmaiyudan kettukkolkiren.

  2. sampath

    சார் சிறு தொழில் தொடங்க எங்கு லோன் கிடைக்கும் .

  3. வடி லீ

    சிறு தொழில் தொடங்க எங்கு லோன் கிடைக்கும் ?

  4. chandrasekaran-SAUDI

    VERY GOOD SCHEME . TAMILNADU GOVERMENT ENGRAGED TO YOUTH
    THANKS FOR CM &DEPARTMET MINISTER .

  5. v.puspalatha

    SIR
    SERU THOLIL PAPPER CUP MACHINI THODANGA ERIKIROM
    FOR THAT WE WANT 5,LAKHS LONE WHERE WE WILL GET THE LONE

  6. velmurugan

    சார் சிறு தொழில்கள் தொடங்குவதற்கான வழிமுறைகள் .

  7. krishnamoorthi

    சார், நான் பிரௌசிங் சென்டர் வைக்க உள்ளேன் . என்னக்கு லோன் கிடைக்குமா? எனக்கு லோன் 2 ,00 ,000 தேவைபடுகிறது. லோன் கிடைத்தால் மிக உதவியாக இருக்கும்.

  8. krishnamoorthi

    எங்கே லோன் கிடைக்கும்

  9. rajen

    dear
    sir i am diploma computer science satdyed i wand lorn for bricks works
    please help me sir
    yours fathifully
    rajan

  10. govindarasu

    எனக்கு மெழுகுவர்த்தி செய்ய லோன் கிடைக்குமா சார்?

  11. MOHAMMED FAROOK

    எனக்கு படிப்பு இல்லை எனது வயது ௪௦ நான் பெருங்காயம் தயாரிக்க எனக்கு கடன் உதவி தேவை முஸ்லிம் லப்பை

  12. n.parameshwari

    நான் இபொழுது acountant பணிபுரிகிறேன். மாலை நேரத்தில் வீட்டில் இருந்தபடியே சுய தொழில் தொடங்க வேண்டும் . என்ன தொழில் செய்வது

  13. kumaresh

    இயா,

    சிறு தொழில் பற்றிய
    வழிமுறைகள் என்ங்கு கிடைக்கும்

  14. lakshmi

    ஹாய்

    i want to do the self work in my home i m graduated person so i want money for that……….please help for youngsters,

  15. dhivgar

    mrs .புஷ்பலதா பேப்பர் cup mechine நான் கூட வாங்கலாம்னு இருக்கேன் ஆனா product மார்க்கெட்டிங் எங்க பண்றது ?சொல்லுங்க ப்ளீஸ் 9047309889

  16. n.venkatesan

    லோன் எங்கு கிடைக்கும் ப்ளீஸ் அட்ரஸ் இன் மெயில்

  17. J.sathyakumar

    சிறு தொழில் துவங்க அரசு மானியத்துடன் விரிவான வழிமுறைகல் தெரியபடுத்தவும்

  18. v.murugan.panry valarthal

    மாண்பு மிகு ஊரக தொழில் துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
    மாண்பு மிகு அமைச்சர் அய்யா ; அவர்களே நான் ஒரு ஆதி திராவிடர் பறையர் இனத்தை சேர்ந்தவன் எனக்கு கோழிப்பண்ணை மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலில் மிகுந்த ஆர்வம் உண்டு ஆர்வத்துடன் இருக்கிறேன் ஆனால் தொழில் தொடங்கும் அளவிற்கு என்னிடம் இடமும் இல்லை பணவசதியும் இல்லை என்னிடம் இருப்பதோ ஒரு அரசாங்கம் கட்டிகொடுத்த ஒரு வீடு இருக்கிறது வேறு பண வசதியோ அல்லது இடவசதியோ என்னிடம் இல்லை அய்யா அதனால் மாண்பு மிகு அமைச்சர் அய்யாவிடம் நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில்தான் நான் இந்த என்னுடைய கோரிக்கையை முன் வைக்க ஆசைப்பட்டேன் அதுபோல் ஆட்சி நடக்கிறது ஆட்சி நடப்பது போல் என்னுடைய தொழிலையும் எனக்கு கண்ண்டிப்பாக தருவீர்கள் என்று மிகவும் உறுதியாக இருக்கிறேன் எனக்கு தொழில் செய்வதற்கு இடமும் வங்கி கடனும் கண்ண்டிப்பாக கிடைக்கும் என்ற எண்ணத்தோடு உறுதியாக என்றும் இருப்பேன் ……இப்படிக்கு .வே .முருகையா என்ற முருகன் .

  19. udhayakumar R

    where can i go that to get loan for self business ?

  20. PRAKASH.E

    சார் சிறு தொழில்கள் தொடங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் சிறு தொழில் தொடங்க எங்கு லோன் கிடைக்கும்

  21. senthil

    அய்யா எனக்கு சிறு தொழில் செய்ய லோன் கிடைக்குமா ?

  22. senthil

    தயவு எனக்கு சிறு தொழில் செய்வதற்கான வழிமுறைகள் கூறுங்கள்.

  23. senthil

    நீங்களே ஒரு நல்ல சிறு தொழில் இருந்தாலும் கூறுங்கள்.

  24. senthil

    சிறு தொழில் தொடங்க எங்கு லோன் கிடைக்கும் ?

  25. karthikeyan.k

    i like to start own business in solar energy system ,i need information where i want to கெட்.

  26. murali kannan

    ஐயா நான் வேளாண் கருவிகள் உற்பத்தி செய்யும் தொழில் தொடங்க போராடுகிறேன் அந்த தொழில் தொடங்க எனக்கு அனுபவமும் திறமையும் உள்ளது நான் தொழில் தொடங்க கடன் உதவி அளிக்கும் வங்கிகள் பற்றியும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் விளக்கம் தருமாற கேட்டு கொள்கிறேன்……… நன்றி

  27. Raja

    நல்ல திட்டம், என்ன சிறு tholil seiyalam ena solluga

  28. ALAGAR

    டாம்கோ திட்டத்தில் எப்படி லோன் VANKUVADU யாரை அணுகவேண்டும் தயவு செய்து உதவுங்கள்

  29. E.Kalaiselvi

    Dear sir,

    நான் கோழி பண்ணை அமைக வேண்டும் லோன் எங்கு கிடைக்கும் .

    Plz Help Me Sir.

  30. Ramesh

    சார் சிறு தொழில்கள் தொடங்குவதற்கான வழிமுறைகள்

  31. sadhik

    ஹூம் இ ஹவே டு காண்டக்ட் டு கெட் எ லோன் போர் பேப்பர் கப் மசினே போயிங்

  32. MUTHU

    சார் சிறு தொழில் தொடங்க எனக்கு லோன் வேண்டும்

  33. venkatesan

    சார் கோழி பண்ணை வைக்க லோன் கிடையாத

  34. somasundarm.a

    அய்யா சிறு தொழில் தொடங்க கடன் கிடைக்குமா நான் உடல் ஊனமுற்றோர் தயவுசெய்து வழிகாட்டுங்கள்

  35. somasundarm.a

    அய்யா சிறு தொழில் தொடங்க கடன் கிடைக்குமா நான் உடல் ஊனமுற்றோர் எனக்கு வழிகாட்டுங்கள்

  36. j.bala

    சார் மொபைல் பிசினஸ் லோன்

  37. j.bala-erode

    மொபைல் ரேச்சர்ஜ் பிசினஸ் லோன் வென்னும்

  38. abdul kareem

    சிறு தொழில் தொடங்க எங்கு லோன் கிடைக்கும் பேப்பர் கப் தயாரிக்க லோன் எங்கு கிடைக்கும்

  39. Ragunathan

    Dear sir/madam
    i want to start a new small business. Please reply me how to get loan.
    I was trying to get loan from 1 year. I don’t know how to get loan. so kindly please help to get a entrepreneur.

  40. k.m.navaneetha krishnan

    sir nan kakitha பை தயாரிக்கும் இயந்திரம் வங்க அரசின் கடன் உதவி kitaikkuma ? எனக்கு வழிமுறைகள் சொல்லுங்கள்.

  41. ksinnathambi

    ஹலோ சார் வணக்கம், எனக்கு காலன் வளர்ர்பு பற்றிய விபரம் வேணும் ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்

  42. byrose

    சார்/மேடம்

    எனக்கு candle சிறு தொழில் பண்ண ரொம்ப இன்டரஸ்டிங்க இருக்கு அதனால் ப்ளீஸ் ஹெல்ப் போர் மீ.

  43. j.selva murugan

    ஹலோ சார் ;
    என் ஊர் திருநெல்வேலி சிறு தொழில் தொடங்க எங்கு லோன் கொடுப்பார்கள்
    தயவுசைது என் மெயிலுக்கு மெசேஜ் பண்ணுக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *