கிருஷ்ணகிரி, ஏப்.8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குருப்-2 எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு கிடைக்காதவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து அனுமதிச் சீட்டு பெற்று தேர்வெழுதலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் பி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒருங்கிணைந்த சார்நிலை பணிக்கான தொகுதி-1 (குருப் 2) எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இத்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,934 பேர் பங்கேற்கின்றனர்.
இத்தேர் வுக்கான நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு வரும்போது மார்பளவு புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களை நேரில் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply