சூரத்தில் உள்ள ரிவர்டேல் என்ற பள்ளியில் 10 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களை தன்னம்பிக்கை வளர்ப்பு என்ற பெயரில் கண்ணாடிச் சிதறல்களும், நெருப்பும் உள்ள படுகை மீது காலணி இல்லாமல் நடக்கச் செய்துள்ளது பள்ளி நிர்வாகம்.
இந்த வாரத்தின் துவக்கத்தில், தன்னம்பிக்கை வளர்ச்சிக்காக இந்தக் கொடூர தீமிதி பயிற்சியை சுமார் 120 மாணவர்கள் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர தன்னம்பிக்கை வளர்ச்சிப் பயிற்சியை தீமிதித்த மாணவர்களின் பெற்றோர்களும் கண்டு களித்தனராம்!
இது பல தொலைக்காட்சி சானல்களிலும் காண்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
Source & Thanks : webdunia.com
Leave a Reply