சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் பிடிவாதம் விலகியது. இது தொடர்பாக விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் அமைத்த ஐவர் குழுவில் தமிழக அரசு சார்பில் பிரதிநிதி இடம் பெறுவார் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார்.
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்., லட்சுமணன் பிரதிநிதியாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச், இதுதொடர்பாக ஆய்வு செய்ய ஐவர் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்த குழுவில் தமிழகம், கேரளா மற்றும் மத்திய அரசின் சார்பில் பிரதிநிதிகள் இடம் பெறுவர் என்றும் இந்த குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆனந்த் தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் மற்றும் கேரளா சார்பில் தலா ஒருவரும், மத்திய அரசின் சார்பில் இருவரும் இடம் பெற வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.
தி.மு.க., செயற்குழுவிலும் தீர்மானம் : இந்த கமிட்டியில் தமிழக அரசு சார்பில் யாரும் இடம் பெற மாட்டார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. சமீபத்தில் கூடிய தி.மு.க, செயற்குழு கூட்டத்திலும் நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே கமிட்டி ஆய்வு செய்து விட்டதால் இது தேவையற்றது என்றும், எனவே இந்த கமிட்டி தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு இந்த பிரச்னையில் மன மாற்றம் அடைந்துள்ளது.
முடிவில் ஏன் மாற்றம் ? : இன்று ( 21 ம் தேதி) தமிழக சட்டசபை கூடியது. சட்டசபையில் , விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில்; இந்த குழு தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து கூறப்பட்டும் கோர்ட் ஏற்க மறுத்து விட்டது. மீண்டும் மத்திய அரசும் குழுவில் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது. இது தொடர்பாக தமிழக தலைமை வக்கீலிடம் ஆலோசித்து கருத்து கேட்கப்பட்டது. எனவே வழக்கின் முடிவு முக்கியம் என்பதை கருதி இந்தக்குழுவில் தமிழக அரசும் பிரதிநிதியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ. ஆர்., லட்சுமணன் தமிழக அரசின் பிரதிநிதியாக குழுவில் இடம் இவ்வாறு அவர் அறிவித்தார்.
Leave a Reply