திருப்பதி : தன் அணியான மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் குழு, இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, திருப்பதியில் தரிசனம் செய்த முகேஷ் அம்பானியின் மனைவி, இரண்டு சூட்கேஸ் பணத்தையும் ஒரு பெரிய பை நிறைய தங்க நகைகளையும் உண்டியலில் போட்டார்.
ஐ.பி.எல்.,லில் தங்கள் அணிதான் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவராக திருப்பதி வந்து தரிசனம் செய்திருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பெங்களூரு அணி ஜெயிக்க வேண்டும் என்று அதன் தலைவர் விஜய் மல்லையா, கடந்த 25ம் தேதி தரிசனம் செய்தார்.அதற்கு முதல்நாள், மும்பை அணி ஜெயிக்க வேண்டும் என்று, முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் தாயார் கோகிலா பென் இருவரும், மும்பை அணியின் 13 பேருடன், சிறப்பு விமானத்தில் 24ம் தேதி இரவு திருப்பதி வந்து இறங்கினர்.மறுநாள் 25ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் முதல் நபராக தரிசனம் செய்தனர். பின், சுப்ரபாத சேவையில் இவர்கள் பங்கேற்றனர்.தரிசனம் முடிந்த பின், அம்பானியின் மனைவி, இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பணத்தையும், ஒரு பெரிய பை நிறைய தங்க நகைகளையும் உண்டியலில் செலுத்தியதாக கோவில் வட்டாரங்கள் கூறுகின்றன.
அம்பானி குடும்பம், சமீப காலங்களில் திருப்பதிக்கு வருவது இது மூன்றாவது முறை. முதல் முறை முகேஷ் அம்பானி தரிசனம் செய்து, விமானத் தங்கத் தகடு திருப்பணிக்காக ஐந்து கோடி ரூபாய் அளித்தார். பின், இரண்டாவது முறை வந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்தார் என்று கூறப்பட்டது.
Leave a Reply